வலிக்குது விடுங்கடா.. ஒரே நேரத்தில் 20 பேர்.. Crime

வலிக்குது விடுங்கடா.. ஒரே நேரத்தில் 20 பேர்..

Advertisement

கன்னியாகுமரி: தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியில் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணை, கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

 

 

பெண்ணின் கணவர் ஜெகன் மற்றும் அவரது தாய் விஜயா ஆகியோர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியைச் சேர்ந்த விஜயா (52) மற்றும் அவரது மகன் ஜெகன் (35) ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

 

ஜெகன், முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (20) என்ற பெண்ணை கடந்த 22 செப்டம்பர் 2025 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமண வயதையும் கடந்தவர்கள். இருப்பினும் பெண் வீட்டாருக்கு இந்த திருமணம் விருப்பமில்லாததால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக ஜெகன் தரப்பு தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டார், தங்கள் மகளுக்கும் ஜெகன் குடும்பத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எழுதிக் கொடுத்துச் சென்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகும் பெண்ணை அழைத்துச் செல்லும் நோக்கத்தில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக ஜெகன் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சமீபத்தில், ஜெகன் வீட்டில் இல்லாத நேரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். மருமகள் திவ்யதர்ஷினியை அடித்து உதைத்து, இழுத்துச் சென்று காரில் ஏற்றிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

பெண் “வலிக்குது விடுங்கடா” என்று கத்தியும் அவர்கள் கேட்கவில்லை என்று விஜயா குறிப்பிட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த விஜயாவிடம் கடுமையான மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மனுவில் எழுதியுள்ளார்.

தற்போது திவ்யதர்ஷினியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கவே அவளை அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜெகன் தரப்பு தெரிவித்துள்ளது. இதில் பெண்ணின் தந்தை சுரேஷ், தாய் கவிதா ஆகியோர் அடியாட்களுடன் வந்து இந்தச் சம்பவம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும், பெண்ணை மீட்டுத் தர முயற்சி செய்யவில்லை என்று விஜயா குற்றம் சாட்டியுள்ளார். தற்போது மருமகளை உடனடியாக மீட்டு தனது மகனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில், பெண்ணை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களைக் கைது செய்து பெண்ணை மீட்டுத் தர வேண்டும் என்பதே ஜெகன் குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

 

இரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இருவரும் திருமண வயதைக் கடந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயா வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

 

Summary : In Kanyakumari district’s Samithoppu-Chettivilai area, Jegan said more than twenty people entered his house when he was away and took his wife Divyadarshini. Her family had opposed their 2025 love marriage. He alleged she was later married to another person. A case was registered against 21 people. The family petitioned the SP seeking her return and reunion with her husband.

Advertisement

📰 Related News

சின்ன பசங்க மேல மனைவுக்கு வந்த ஆசை...! ஒரே நேரத்தில் 3 பேர் கூட...புருஷன் வேஸ்ட் அவனுக்கு ஒண்ணும் முடியாது..!
1 hour ago
2 பத்தாது 20 வேணும்... கணவன் மனைவியின் தீராத ஆசை..
1 hour ago
19 வயது பெண், 40 வயது அங்கிள்-கூட உடலுறவு
2 days ago
பூட்டிய வீட்டில் முனகல் சத்தம்.. சமையலறையில் விடிய விடிய அமுக்கு ராணி உல்லாசம்..
1 week ago