Tamil Ilakkanam – செய்வினை, செயப்பாட்டு வினை (Seivinai, Seyappaattu Vinai) | TNPSC Tamil Notes
செய்வினை, செயப்பாட்டு வினை for TNPSC Exams TNPSC & TET தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த பக்கத்தை வடிவமைத்துள்ளோம். குறிப்பாக சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள TNPSC Syllabus-ஐ அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
TNPSC Tamil Ilakkanam- செய்வினை, செயப்பாட்டு வினை (Seivinai, Seyappaattu Vinai)
செய்வினை
செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை
- அப்பா சொன்னார்
- பாட்டுப் பாடுகிறாள்
“குடியரசுத் தலைவர் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.”
எழுவாய், செய்யும் வினை அமைந்த தொடர் செய்வினைத்தொடர் எனப்படும். செயப்படுபொருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்பட்டு வரும். சில தொடர்களில் மறைந்தும் வரும். |
செயப்பாட்டு வினை
செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை
- தோசை வைக்கப்பட்டது.
- பாட்டுப் (அவளால்) பாடப்பட்டது.
- கவிதா உரை படித்தாள்
‘படு’ என்பதைப் போல, ‘உண், பெறு’ முதலான துணைவினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன. அவற்றைப் போலவே, எச்சங்களுடன் சேர்ந்து ஆயிற்று, போயிற்று, போனது முதலான துணை வினைகள் செயப்பாட்டுவினைகளை உருவாக்குகின்றன.
- கோவலன் கொலையுண்டான்.
- ஓவியம் குமரனால் வரையப்பட்டது.
- வீடு கட்டியாயிற்று.
- சட்டி உடைந்து போயிற்று.
- பணம் காணாமல் போனது.
- உரை கவிதாவால் படிக்கப்பட்டது.
உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
இத்தொடரில் செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்னும் வரிசையில் சொற்கள் அமைந்துள்ளன. எழுவாயோடு ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வகைத் தொடர்களில் படு, பட்டது, பெறு, பெற்றது என்னும் துணைவினைகளிலொன்று பயனிலையோடு சேர்ந்து வரும். |
செய்வினை – செயப்பாட்டு வினை
கயல்விழி பாடத்தைப் படித்தாள் – செய்வினைத் தொடர் (இத்தொடரைச் செயப்பாட்டுவினையாக்க)
கயல்விழி பாடத்தைப் படித்தாள் – செய்வினைத் தொடர்
பாடம் கயல்விழியால் படிக்கப்பட்டது – செயப்பாட்டு வினைத்தொடர்.
| கயல்விழி | பாடத்தைப் | படித்தாள் |
| எழுவாய் | செயப்படுபொருள் | பயனிலை |
- எழுவாயைச் செயப்படுபொருளாக்கவேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபு சேர்க்கவேண்டும். (கயல்விழி + ஆல் = கயல்விழியால்)
- செயப்படுபொருளில் உள்ள ‘ஐ’ என்ற வேற்றுமை உருபை நீக்கி எழுவாயாக மாற்றவேண்டும். (பாடத்தை = பாடம் + ஐ = ஐ நீக்கினால், பாடம்)
- பயனிலையுடன் படு, பட்டது என்னும் துணைவினை சேர்க்கவேண்டும்.
(படித்தாள் = படிக்கப்பட்டது)
கீழ்க்காணும் தொடர்களைச் செயப்பாட்டு வினையாக்குக:
அ) கலையரசி துணியைத் தைத்தாள்.
விடை: துணி கலையரசியால் தைக்கப்பட்டது.
ஆ) ஆசிரியர் பாடத்தை நடத்தினார்.
விடை: பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.
இ) பூங்குழலி உணவைச் சமைத்தாள்.
விடை: உணவு பூங்குழலியால் சமைக்கப்பட்டது.
கீழ்க்காணும் தொடர்களைச் செய்வினையாக்குக:
அ) ஓவியம் மாறனால் வரையப்பட்டது.
விடை: மாறன் ஓவியம் வரைந்தான்.
ஆ) மாலை மல்லிகாவால் தொடுக்கப்பட்டது.
விடை: மல்லிகா மாலை தொடுத்தாள்.
இ) பாரி கபிலரால் போற்றப்பட்டார்.
விடை: கபிலர் பாரியைப் போற்றினார்