கணவனை பிரிந்த பேராசிரியை.. கடைசியாக Crime

கணவனை பிரிந்த பேராசிரியை.. கடைசியாக

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த சுகன்யா, காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அவர், தனக்குத் தெரிந்தவர்களுக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி துறையூர் கண்ணனூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுமதிக்கு சுகன்யா பணம் கொடுத்திருந்தார். சம்பவத்தன்று கடன் தொகையை வசூலிக்க சுமதியின் வீட்டிற்குச் செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டுச் சென்ற சுகன்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

 

 

மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த 23ஆம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அங்குள்ள காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்து, “உங்கள் மகள் சுமதியின் ஊர் லிமிட்டில் உள்ள ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளியுங்கள்” என அலட்சியமாக அனுப்பி வைத்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

மகளைத் தேடி தவித்த பெற்றோர் நேரடியாக மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர். ஐஜி அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்தே உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய முன்வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி துறையூர்–திருச்சி சாலையில் கரட்டாம்பட்டி கிரஷர் அருகே உள்ள சிறு பாலத்தின் கீழ் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக புலிவளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற புலிவளம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

சுகன்யாவின் பெற்றோரை வரவழைத்து உடலின் அடையாளங்களைக் காட்டியபோது, அது தங்களது மகள் சுகன்யாதான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி கதறினர்.

Advertisement

புலிவளம் காவல் நிலையம் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று சுமதி வீட்டிற்குப் பணம் கேட்டுச் சென்ற சுகன்யாவுடன் தகராறு ஏற்பட்டதாகவும், சுமதி, அவரது கணவர் துரைராஜ் மற்றும் உறவினர்கள் இணைந்து சுகன்யாவைத் தாக்கி உயிரிழக்கச் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கரட்டாம்பட்டி அருகே உள்ள பாலத்தின் அருகில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சுமதி, அவரது கணவர் துரைராஜ் உள்ளிட்ட ஆறு பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புகாரை ஏற்காமல் பெற்றோரை அலைக்கழித்த குற்றத்திற்காக துறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கிரே பிரவீண் உமேஷ் உத்தரவிட்டார்.

விரிவுரையாளரின் தந்தை, “என் மகள் வட்டிக்குப் பணம் கொடுக்கவில்லை. மகளின் படிப்புக்காக சுமதி கடன் கேட்டிருந்தார். அதை வசூலிக்கச் சென்றதால் இவ்வாறு நடந்தது” என கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் திருச்சி மாவட்ட காவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து புகாரை ஏற்காத எஸ்.ஐ. தினேஷிடம் எஸ்பி டோங்கிரே பிரவீண் உமேஷ் நேரில் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் தினேஷ் மீது தவறு இல்லை எனக் கூறி, அவரை மீண்டும் துறையூரில் பணிபுரிய உத்தரவிட்டுள்ளார்.

Summary in English : Suganya, a lecturer from Keerambur near Thuraiyur, left to collect a pending amount from Sumathi and did not return. Parents faced delay at Thuraiyur station. Remains were found near Karattampatti bridge. Sumathi, Durairaj and four others were taken into custody. The officer first shifted was later posted back after inquiry.

Advertisement

📰 Related News

மெதுவாவே பண்றேன்.. மாணவியிடம் கணித ஆசிரியர் ஆபாச செல்போன் பேச்சு.. தீயாய் பரவும் காது கூசும் ஆடியோ..
1 hour ago
வலிக்குது விடுடா.. கதறிய பெண்..” விடாத முன்னாள் காதலன்..
1 hour ago
மகன் மற்றும் மகனின் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற தாய்.. அரங்கேறிய
1 hour ago
நூடுல்ஸ் மாஸ்டருடன் உல்லாசம்.. அளவெடுக்க அழைப்பு..
1 hour ago