Entertainment & Arts
படவாய்ப்புக்காக படுக்கை தீயாய் பரவும் சீரியல் நடிகை வீடியோ!
படவாய்ப்புக்காக படுக்கை தீயாய் பரவும் சீரியல் நடிகை வீடியோ! புகாரின் பேரில் ஒருவர் கைது!
Neufacts8/02/2026 05:20:00 PM
சென்னை வடபழனியைச் சேர்ந்த சீரியல் நடிகையிடம் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைகாட்டி பணம் மற்றும் நகைகளைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷேக் முத்தலிப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக, அந்த நடிகையிடம் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவரை அணுகிய இவர், பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனைப் படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மிரட்டலின் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 11 தவணி நகைகள் வரை பெற்றுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் புகாரளித்த சீரியல் நடிகை, சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அவரது நண்பியின் மூலம் தான் ஷேக் முத்தலிப் உடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் இவர், “சினிமாவில் நடிக்க வைத்துவிடுவேன்” என்று ஆசை வார்த்தைகள் கூறி நடிகையை அணுகியுள்ளார். அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து, செல்போனில் வீடியோ எடுத்து வைத்து தொடர்ந்து மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
பயத்தால் முதலில் புகார் அளிக்காமல் இருந்த நடிகை, மீண்டும் பணம் கேட்டு மிரட்டியபோது தான் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் ஷேக் முத்தலிப்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி, நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் இன்னொரு நபரும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் உள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ஷேக் முத்தலிப் மீது வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
English Summary : A man named Sheikh Muthalib was arrested in Chennai’s Vadapalani for cheating a serial actress by promising film opportunities. He allegedly sexually assaulted her, recorded videos, blackmailed her, and extracted around ₹2 lakh and 11 pieces of jewellery. Another accused is absconding. Police from the All Women Police Station are investigating.
📰 Related News