Note Details
தமிழ்நாட்டின் புவிசார் குறியீடுகள்: ஒரு சிறப்புப் பார்வை! | Geographical Indications (GI Tags) of Tamil Nadu – A Complete List for TNPSC Preparation

தமிழ்நாட்டின் புவிசார் குறியீடுகள்: ஒரு சிறப்புப் பார்வை!
வணக்கம் நண்பர்களே!
புவிசார் குறியீடு (Geographical Indications – GI Tags) என்பது ஒரு குறிப்பிட்ட புவிசார் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். இது அப்பொருளின் தனித்துவமான பண்புகள், தரம், மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும். மேலும், புவியியல் குறியீடு பொருளுக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, சந்தையில் அதற்கான மதிப்பை உயர்த்துகிறது.
தமிழ்நாடு மற்றும் புவியியல் குறியீடு
சமீப காலங்களில், தமிழ்நாடு அரசு பல சங்கங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து, மாநிலத்தின் முக்கிய பொருட்களுக்கு புவியியல் குறியீடு பெறுவதில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம்,
- மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.
- பொருட்களின் சர்வதேச அங்கீகாரம் உறுதி செய்யப்படுகிறது.
2024 டிசம்பர் 31 நிலவரப்படி, தமிழ்நாடு 59 புவியியல் குறியீடுகளுடன், இந்தியாவில் உத்தரப் பிரதேசம் (74 GI Tags) அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது.
TNPSC Students Note: Understanding GI Tags is vital for TNPSC Geography, Economy, and General Knowledge sections. Don’t forget to check out the TNPSC Group 4 Syllabus for a detailed overview.
தமிழ்நாடு பெற்ற முக்கிய புவியியல் குறியீடுகள்
கீழே, தமிழ்நாட்டின் முக்கியமான GI பொருட்களின் பட்டியல் மற்றும் அவற்றின் தனிச்சிறப்புகளை காணலாம்:
உணவு மற்றும் விவசாய பொருட்கள்:
- ஊட்டி வர்க்கி – பாரம்பரிய இனிப்பு, நீலகிரி மலை.
- கொடைக்கானல் மலைப் பூண்டு – மருத்துவ குணமுள்ள பூண்டு, கொடைக்கானல்.
- சேலம் ஜவ்வரிசி – மரவள்ளிக் கிழங்கை அடிப்படையாகக் கொண்ட உணவு.
- மதுரை மல்லி – வாசனைமிக்க மல்லிகைப் பூ வகை, மதுரை.
- கோவில்பட்டி கடலை மிட்டாய் – தூத்துக்குடி மாவட்டம், நெகிழ்வான கடலை இனிப்பு.
கைவினை மற்றும் கலைப்பொருட்கள்:
- தஞ்சாவூர் பொம்மை – மண்ணால் செய்யப்பட்ட பாரம்பரிய பொம்மைகள்.
- நாச்சியார்கோயில் குத்துவிளக்கு – பித்தளை மற்றும் வெண்கலக் குத்துவிளக்கு, தஞ்சாவூர்.
- பத்தமடை பாய் – கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய், திருநெல்வேலி.
பகுதி சார்ந்த சிறப்பு பொருட்கள்:
- திண்டுக்கல் பூட்டு – 150 ஆண்டுகள் பழமையான பூட்டு தயாரிப்பு.
- மணப்பாறை முறுக்கு – நறுமணம் மற்றும் சுவை மிக்க பாரம்பரிய முறுக்கு.
- பழனி பஞ்சாமிர்தம் – பழனி தண்டாயுதபாணி கோவில் prasadam.
GI Tags Full List
S.No | பொருள் | கிடைக்குமிடம் |
1 | வெண்பட்டு | சேலம் |
2 | சுங்குடி சேலை | மதுரை |
3 | பட்டு | காஞ்சிபுரம் |
4 | பவானி | ஜமாக்காளம் |
5 | பட்டு | ஆரணி |
6 | மாவு அரைக்கும் இயந்திரம் | கோயம்புத்தூர் |
7 | ஓவியங்கள் | தஞ்சாவூர் |
8 | கலைத்தட்டு | தஞ்சாவூர் |
9 | தலையாட்டி பொம்மை | தஞ்சாவூர் |
10 | வீணை | தஞ்சாவூர் |
11 | கலைத்தட்டு இலச்சினை | தஞ்சாவூர் |
12 | நெட்டி வேலைப்பாடு | தஞ்சாவூர் |
13 | கோயில் நகைகள் | நாகர்கோவில் |
14 | கிழக்கிந்திய தோல் | திருச்சி |
15 | ஃபேப்ரிக் துணி | சேலம் |
16 | தேயிலை | நீலகிரி |
17 | கோப்ரா பட்டு சேலை | கோவை |
18 | வெண்கலச்சிலை | சுவாமிமலை |
19 | நெட்டை தென்னை | ஈத்தா மொழி |
20 | நாதஸ்வரம் | நரசிங்கம்பேட்டை |
21 | மலை வாழை | விருப்பாட்சி |
22 | மலை வாழை | சிறுமலை |
23 | மல்லிகை | மதுரை |
24 | பாய் | பத்தமடை |
25 | மஞ்சள் | ஈராேடு |
26 | கற்சிற்பம் | மகாபலிபுரம் |
27 | கோவில் நகை இலச்சினை | நாகர்கோவில் |
28 | வெண்கலச் சிலை இலச்சினை | சுவாமிமலை |
29 | மிளகு | மலபார் |
30 | பாரம்பரிய பூத்தையல் | நீலகிரி |
31 | குத்து விளக்கு | நாச்சியார் கோவில் |
32 | கொட்டான்கள் | செட்டிநாடு (காரைக்குடி) |
33 | பட்டு சேலை | திருபுவனம் |
34 | மலைப்பூண்டு | கொடைக்கானல் |
35 | பஞ்சாமிர்தம் | பழனி |
36 | பூட்டு | திண்டுக்கல் |
37 | பால்கோவா | ஸ்ரீவில்லிபுத்தூர் |
38 | கடலை மிட்டாய் | கோவில்பட்டி |
39 | மரச்சிற்பம் | அரும்பாவூர் |
40 | கலம்காரி ஓவியங்கள் | கருப்பூர் |
41 | கிராம்பு | கன்னியாகுமரி |
42 | முள்ளு கத்திரிக்காய் | வேலூர் |
43 | குண்டுமிளகாய் | இராமநாதபுரம் |
44 | முறுக்கு | மணப்பாறை |
45 | தேன் | மார்த்தாண்டம் |
46 | தைக்கால் பிரம்பு வேலைப்பாடுகள் | மயிலாடுதுறை |
47 | ஆத்தூர் வெற்றிலை | தூத்துக்குடி |
48 | வெற்றிலை | சோழவந்தான் |
49 | பன்னீர் திராட்சை | கம்பம் |
50 | காட்டன் சேலை | நெகமம் |
51 | ஜவ்வரிசி | சேலம் |
52 | வருக்கி | ஊட்டி |
53 | கற்சிற்பம் | மயிலாடி |
54 | மண்பாண்டம் | மானாமதுரை |
55 | தேநீர் | நீலகிரி |
56 | கண்டாங்கி சேலை | காரைக்குடி |
57 | வெண்ணெய் | ஊத்துக்குளி |
58 | பனங்கருப்பட்டி | உடன்குடி |
59 | ஜடேரி நாமக்கட்டி | திருவண்ணாமலை |
- தற்போது இதுவரை இந்தியாவில் 605 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
- 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 10,000 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- புவிசார் குறியீடு சட்டம் 1999 கொண்டு வரப்பட்டது
- 15 செப்டம்பர் 2003-ல் நடைமுறைக்கு வந்தது.
- 2004-ல் உலகில் முதன் புவிசார் குறியீடு டார்ஜிலிங் தேயிலைக்கு வழங்கப்பட்டது