Note Details

20th December 2024 Current Affairs Question and Answers in Tamil | நடப்பு நிகழ்வுகள்

Note Image

Daily Current Affairs in Tamil

Here we have updated 20th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

Current Affairs Quiz 20th December 2024

1. மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்ட ஆண்டு?

  1. 2020
  2. 2021
  3. 2022
  4. 2023

Answer:– 2021

Explanation:

  • தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் இதற்கான மருந்து பெட்டகம் ஈரோடு நஞ்சானாபுரத்தை சேர்ந்த சுந்தரம்பாளுக்கு வழங்கப்பட்டள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மக்களைத் தேடி மருத்துவம் : 05.08.2021
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சமணப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

2. மேற்கூரை சோலார் நிறுவலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்?

  1. மகாராஷ்டிரா
  2. உத்திரப்பிரதேசம்
  3. குஜராத்
  4. மத்தியபிரதேசம்

Answer:– குஜராத்

Explanation:

  • மேற்கூரை சோலார் நிறுவலில் குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற  மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • மத்திய அரசின் PM – Surya Ghar: Muft Bijli Yojana : 15.02.2024

3. கங்கை நதியின் டால்பினின் முதல் செயற்கைக்கோள் குறியீடு நடந்துள்ள இடம்?

  1. அசாம்
  2. உத்திரப்பிரதேசம்
  3. சத்திஸ்கர்
  4. உத்திரகாண்ட்

Answer:– அசாம்

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய நீர்வாழ் விலங்கு – கங்கை டால்பின் (18.05.2010)
  • விக்ரம்சீலா கங்கைநதி டால்பின் சரணலாயம் – பீகார்
  • கங்கை நதி டால்பின் அதிகம் உள்ள மாநிலம் – உத்திரப்பிரதேசம்

4. ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டு நாடாளுமன்றகுழு யாருடைய தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது?

  1. சந்துரு
  2. அமித்ஷா
  3. P.P.செளத்ரி
  4. கருணாகரன்

Answer:– P.P.செளத்ரி

Explanation:

  • P.P.செளத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டு நாடாளுமன்றகுழுவில் மக்களவை உறுப்பினர்கள் 21 பேர், மாநிலங்களவை உறுப்பினரகள் 10பேர் உள்பட 31 உறுப்பினர்கள் அடங்கியுள்ளன.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் 129வது சட்டத்திருத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • மேலும் 82A(2), 83(3), 83(4), 327 ஆகிய விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது.

5. இந்திய ராணுவத்தின் செயற்கை நுண்ணறிவு இன்குபேஷன் மையம் தொடங்கப்பட உள்ள இடம்?

  1. பெங்களூர்
  2. கொல்கத்தா
  3. சென்னை
  4. மும்பை

Answer:– பெங்களூர் (கர்நாடகா)

6. இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கர்நாடகா
  3. டெல்லி
  4. மகாராஷ்டிரா

Answer:– டெல்லி

7. புற்றுநோய் தடுப்பூசியை தயாரித்துள்ள நாடு?

  1. அமெரிக்கா
  2. ஜப்பான்
  3. ரஷ்யா
  4. சீனா

Answer:– ரஷ்யா

Explanation:

  • ரஷ்யா தயாரித்துள்ள புற்றுநோய் தடுப்பூசியானது அடுத்த ஆண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

8. பூடானின் ராயல் கெளரவ பட்டம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. டாம் குரூஸ்
  2. அருண் கபூர்
  3. சத்தியநாதன்
  4. ஜித்ரே சிங்

Answer:– அருண் கபூர்

Explanation:

  • பூடானில் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டதற்காக பூடானின் ராயல் கெளரவ பட்டம் அருண் கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

9. அமெரிக்க கடற்படையின் உயரிய சிவிலியன் விருதினை பெற்ற நபர்?

  1. டாம் குரூஸ்
  2. அருண் கபூர்
  3. சத்தியநாதன்
  4. ஜித்ரே சிங்

Answer:– டாம் குரூஸ்

10. சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity day) கடைபிடிக்கப்படும் நாள்

  1. டிசம்பர் 18
  2. டிசம்பர் 19
  3. டிசம்பர் 17
  4. டிசம்பர் 20

Answer:– டிசம்பர் 20